மேலசெக்காரக்குடி கிராமத்தில் இருந்து தூத்துக்குடி வரை வழித்தடம் எண் 56 A என்ற புதிய பேருந்து சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த எம்எல்ஏவிற்கு தொமுச நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ரமேஷன், கிளை மேலாளர் ரமேஷ் பாபு, தொமுச நிர்வாகிகள் லிங்குசாமி, முருகன்,மனோகர்,வேல் ராஜா படையப்பா,கணேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
