தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி 24-வது வார்டில் மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, மேயர் ஜெகன் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று அப்பகுதி மக்களுடன் உரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த வார்டில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகிகளிடமும் மக்கள் கருத்துகளையும் சேகரித்தார்.
மேயர் ஜெகன் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் இணைந்து வலுப்படுத்த வேண்டும். திமுக அரசு செய்து வரும் மக்கள் நலத் திட்டங்களை இன்று முதல் நேரில் சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர் இன்னும் இரண்டு நாளில் துவக்க உள்ளார். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதி பெற்ற அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்,” என்றார்.
மேலும் அவர்,
தூத்துக்குடியில் உருவாக உள்ள இரண்டு கப்பல் கட்டுதளங்கள் மூலம் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்,
தெருவிளக்கு, சாலை, பூங்கா, குடிநீர், கழிவு மேலாண்மை உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன,
மீதமுள்ள தேவைகள் விரைவில் நிறைவேற்றப்படும்,
என்று உறுதியளித்தார்.
அண்ணாநகர், டி.எம்.பி காலனி, சண்முகபுரம், மட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பழைய கான்கள் உடைந்திருந்ததால் புதிய கான்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பகுதி மக்களின் நேரடி புகார்களை கேட்டறிந்த மேயர் ஜெகன், திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் மக்கள் வாசலில் — திமுக அரசின் சாதனைகள் எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினார்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பெருமாள்புரதத்தை சேர்ந்த மாரியம்மாள் குரல் கொடுத்த பிரச்சினைகள் — தூத்துக்குடி பகுதி சபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கை ‘சூடு’
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026