ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிளையூரணி ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆரோக்கியபுரம், பவி ஸ்ரீநகர், ஆ.சண்முகபுரம், கே.வி.கே.சாமி நகர், வடக்கு சோட்டையன் தோப்பு, பூப் பாண்டியாபுரம், மேற்கு காமராஜர் நகர், தொழுநோய் மருத்துவமனை பகுதி, மாதாநகர், சுடலையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றமும் சரள் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, ஊராட்சி செயலர் ஜெயரத்தினம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C. ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி நெல்சன், ஜேசுராஜ், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் (சுடலையாபுரம்) முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மழை பாதிப்பு பகுதிகளில் அவசர கால நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வின் போது தெரிவித்தார்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் மக்கள் வாசலில் — திமுக அரசின் சாதனைகள் எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினார்!
அடுத்த
தூய மரியன்னை கல்லூரியில் ‘கவியும் காவலரும் பாரதியார்’ பேச்சுப் போட்டி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026