மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை ஒட்டி, தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சிக் கல்லூரியில் நூலகக் குழு, வாசகர் வட்டம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணிமன்றம் இணைந்து நடத்திய பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. ‘கவியும் காவலரும் பாரதியார்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் பதினாறு மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, பெண்கள் விடுதலை குறித்து பாரதி எழுதிய கவிதைகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.
சிறப்புரையாற்றிய தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன், “இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பாரதி” என்று கூறினார். நன்றி உரையாற்றிய புத்தக வாசிப்பு நற்பணிமன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து, மாணவிகளின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் முனைவர்கள் வினிதா, பிரியங்கா, அந்தோணி, மெல்பா சரணோன், விஜயலட்சுமி, எலிசபெத் ரெஜினா, ஜேம்ஸ் அந்தோணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, செல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூய மரியன்னை கல்லூரியில் ‘கவியும் காவலரும் பாரதியார்’ பேச்சுப் போட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு!!
அடுத்த
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ – விளாத்திகுளம் தொகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்கம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெகுவிமர்சனம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026