தூத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ் உழைப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகில் நடைபெற்ற இவ்விழாவிற்கு எச்.எம்.எஸ் மாநிலச் செயலாளர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலையில் கொடியேற்றி, உழைப்பாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், மாவட்ட இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்பாளர் பிரம்மநாயகம், தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், ராஜேஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஹர்ஷவர்தன், செந்தில், சுப்புராஜ், சோமு, ராஜசேகர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பூர்ணிகா அஸ்வினி, அமுதா செல்வி, வேலபுஷ்பம், சந்திராமணி, மாலதி, மீரா, மிருதுளா, சரஸ்வதி ஆகியோரும் பங்கேற்றனர். அதேபோல் ஓட்டப்பிடாரம் பகுதி நிர்வாகிகள் குமாரசாமி, காசிராஜன், பேச்சிமுத்து, கருப்பசாமி, ராஜேஷ், பூல்பாண்டி, அரவிந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.