6.12.2025, சனிக்கிழமை — காலை 9.40 மணியளவில் புரட்சியாளர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் மற்றும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினரான இளம் புரட்சியாளர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணை, பொதுச் செயலாளர் “இளைஞர்களின் எழுச்சி வீரர்” D. ருசேந்திர குமார் மற்றும் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் இந்த நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் பரிந்துரை S. தொம்மை குரூஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆ. இந்திரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் S. சிறு லட்சுமி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அவர்கள் சிலைக்கு முன்பு வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட APLF அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் S. கணேசன், மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் T. மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சந்தியாகு, தூத்துக்குடி மாநகர் 53வது வட்ட செயலாளர் N. முத்துகிருஷ்ணன், 57 வது வட்ட செயலாளர் ஞானப்பிரகாஷ், 58 வது வட்ட செயலாளர் K. அருள்தாஸ் நாடார் உள்ளிட்ட மகளிர் அணி, இளைஞர் அணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக K. சங்கர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இப்படிக்கு,
புரட்சி பாரதம் கட்சி
செய்தி பிரிவு — தூத்துக்குடி மாநகர் மாவட்டம்
தொடர்பு : 93633 17545
தூத்துக்குடி
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினரின் பாபா சாகிப் டாக்டர். அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் – எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தலைமையில் அம்பேத்கர் நினைவு தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
அடுத்த
எம்எல்ஏ G.V. மார்கண்டேயன் தலைமையில் டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026