தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடம், தென்தமிழகத்தில் தனிச்சிறப்புடன் பிரசித்தி பெற்ற தெய்வீகத் தலம். மிகப்பெருஞ் சிறப்பில் எழுந்தருளி பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு, இந்த மாதமும் அமாவாசையை முன்னிட்டு விசேஷ யாகம் நடைபெறுகிறது.
கார்த்திகை மாத அமாவாசையை ஒட்டி வரும் 19ஆம் தேதி புதன்கிழமை, பக்தர்களின் வாழ்வில் உள்ள கடன்தொல்லைகள் நீங்கி, செல்வம் பெருகிட வேண்டி மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகம் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி விவரம்:
காலை 10 மணி – கணபதி ஹோமத்துடன் வழிபாடு தொடக்கம்
பகல் 11 மணி – மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள்
மதியம் 12.30 மணி – கடன்தொல்லை நீங்க, எதிரி தொல்லைகள் விலக, திருமண வரம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, செல்வ வளம் பெற வேண்டி மிளகாய் வற்றல் மஹா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு
தொடர்ந்து – மஹா காலபைரவர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனை
முடிவில் – பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படும்
மஹா யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெறலாம் என பீடம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நவம்பர் 19ஆம் தேதி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் கடன்தொல்லை நீங்கி செல்வம் பெருக வேண்டி பக்தர்கள் வழிபாடுகள்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலைச் சீரமைப்பு மற்றும் அங்கன்வாடி பாதுகாப்பு பணிகள் அவசியம் – பாஜக வர்த்தக பிரிவு ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
மாப்பிள்ளையூரணியில் கதவு எண்–சொத்துவரி மோசடி: இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வீரமுருகன் மனுநீதி நாளில் ஆட்சியரிடம் புகார் மனு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026