தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு வேண்டி ஏரல் கணேசபுரம் (வார்டு-15) பகுதியில் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கர் சமூக மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஏரலின் காட்டு நாயக்கர் சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுச் சலுகைகளை பெற முடியாமல் தவிக்கும் நிலையை மனுவில் விளக்கினர். ஜாதி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிக்கலால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பலர் பாதியில் கல்வியை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்களது பாரம்பரிய தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் குறி சொல்வது போன்ற குலத்தொழில்களின் சுமையை இன்றும் இளம் தலைமுறையினர் தாங்கி வருவது வேதனையளிப்பதாக கூறப்பட்டது. குலத்தொழிலை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், எங்களுக்கும் உரிய சலுகைகளை பெற ஜாதி சான்றிதழ் அவசியம் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
காட்டு நாயக்கர் சமூகத்தினரின் உறவினர்களின் சாதி சான்றிதழ்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டன.
இந்த மனுவை புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மாரி செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.
மனு அளிக்கும் நிகழ்வில் மின்னல் அம்ஜத், மக்கள் அதிகாரக் கழகம் தாளமுத்து செல்வா, விசிக ஏர்ல் நகர செயலாளர் முத்து லிங்கம், திருவைகுண்டம் அமைப்பாளர் முத்து ராஜ், சிபிஎம்எல் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமர், மாவட்ட புரட்சி பாரதம் கட்சி பொறியாளர் மகேந்திரன், உட்பட காட்டு நாயக்கர் சமூக மக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு, உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காட்டு நாயக்கர் சமூகத்தின் மனு — கண்டன முழக்கத்துடன் பொதுமக்கள் திரள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மதுவில்லா தமிழகத்துக்கான முதல் படி… வைகோ தலைமையில் ‘சமத்துவ நடை’ வீரர்கள் தேர்வில் கலிங்கப்பட்டியில் உற்சாக அலை!”
அடுத்த
சாலைச் சீரமைப்பு மற்றும் அங்கன்வாடி பாதுகாப்பு பணிகள் அவசியம் – பாஜக வர்த்தக பிரிவு ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026