தமிழ்நாடு அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலனில் மேம்பாட்டில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர், வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் (தருவை மைதானம்) குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் 50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.
நவீன உடற்பயிற்சி கூடத்தை இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்ட ராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.
