தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிபராசக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (25.11.25) நேரில் பார்வையிட்டார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
மேலும், மாவட்ட தொழில் மையம் அருகிலுள்ள செங்குளம் ஓடை வழியாக மழைநீர் சீராகப் பாயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் குழுவினர் நேரில் கண்காணித்தனர். ஆய்வின்போது தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உடனடி நிவாரணம் பெறுவதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்பி கனிமொழி கருணாநிதி ஆய்வு – ஆதிபராசக்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகம்!!
அடுத்த
G. V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026