மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கல்வி விருது வழங்கும் விழாவானது தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வருகின்ற ஜூன் 29 ம் தேதி மாலை நடைபெறுகிறது.

2024 - 2025 கல்வியாண்டில் 10th, +1, +2, வகுப்பில் 80% மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை 2 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கல்வி விருது வழங்கும் விழா நடைபெறக்கூடிய ஜூன் 29 ம் தேதி முத்தையாபுரத்தில் வைத்து மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு திமுக மாநில துணை பொதுச் செயலாளர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி முன்னிலை வகிக்க இருக்கிறார்.

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி, முன்னாள் எம்.பி., மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை கௌரவ தலைவர், ஏ.கே.எஸ். விஜயன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், ஆகியோர் தலைமை வகிக்க இருக்கிறார்கள்.


விருது வழங்க சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபரும், வழக்கறிஞருமான ஆர். ரமேஷ் பாண்டியன் பங்கேற்கிறார். தலைமை சட்ட ஆலோசகர் , ஐகோர்ட் வழக்கறிஞர் தேன்மொழி, மற்றும் ஒருங்கிணைப்பாளர் செல்வி மோகன் ஆகியோர் விழா தொகுப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், பொருளாளர் திலகாதமிழ் ஆகியோர் விழா வரவேற்புரை நிகழ்த்துகின்றனர்.

அறக்கட்டளை அறங்காவலர்கள் தேவேந்திர வேல்சாமி, திருப்பதி, தீன் மூர்த்தி , திலகாதமிழ், விஜயகுமார், மணிகண்டன், அழகர்சாமி, சுதாகர், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் பழனிச்சாமி, செல்விமோகன், அருண்பாண்டியன், ராஜா குடும்பர், எம்.சி. நவீன், அய்யா. தினேஷ், மானாகிரிசரத், சட்ட ஆலோசகர்கள் தேன்மொழி, ரமேஷ் பாண்டியன், சின்னத்துரை, ராஜேஷ், கனகராஜ், அர்ஜுன், சங்கர், சுரேஷ், ராம்குமார், பழனி, ராம்குமார், விழா ஒருங்கிணைப்பாளர்கள் (தூத்துக்குடி ) தங்கமாரியப்பன், பெரியதுரை, ஏ.கே. கண்ணன், வினோத், ராஜேஷ், பாலா, லட்சுமணன், செல்வகுமார், சின்னத்துரை, மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியானது தொடங்கி இரவு 7.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நிறுவனர் எம். ஆதி ஆனந்த் பாண்டியன் முன்னெடுப்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.