இளைய காமராஜர் என A1 போஸ்டர் வெளியிட்ட தவெக ஜோசப் விஜய்க்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் :-

தவெக தலைமை இருக்கையில் ஜோசப் விஜய் அமர்ந்த நிலையிலும், காமராஜர் நிற்பது போன்றும், தவெக தலைவர் ஜோசப் விஜய்யை இளைய காமராஜர் என்று A1 போஸ்டர் வெளியிட்டதற்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அறிவு இல்லையா, யாரு உட்காருவது, யாரு அமர்ந்து இருப்பது தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களே உடனடியாக A1 போஸ்டர் வெளியிட்டதை திரும்ப பெற வேண்டும். அதற்கு தாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் உரிய அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் தலைவர் கடும் கண்டனத்தை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
