ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததை அடுத்து தூத்துக்குடியில் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஓரணியில் தமிழ்நாடு இணைந்த திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்போம். அவர்கள் நம்முடன் சேருகிறார்களோ, இல்லையோ ஒன்றிய அரசு என்னென்ன செய்திருக்கிறது. தமிழக அரசு என்ன நலத்திட்டங்களை செய்திருக்கிறது. என்பதை சொல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
வரக்கூடிய காலங்களில் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்கள். என்ற உறுதியோடு இயக்கத்தின் சகோதரர்கள் அத்தனை பேரும் பணியாற்றி வருகிறார். தமிழக மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் செயல்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் "ஒன்றிய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. 100 நாள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை என கிராமப்புற குழந்தைகளின் உயர்கல்வி மறுக்கப்படுகிறது.
இப்படி படிப்படியாக ஒன்றிய அரசு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இதுவரை ஒரு பதிலும் சொல்லவில்லை, ஒன்றிய அரசு இவ்வளவு வஞ்சிக்கிறார்கள். என்றால் அவர்கள் தமிழகத்தில் காலூண்டினால் அவர்கள் எப்படி வஞ்சிப்பார்கள்.
தமிழகத்தை எப்படி வஞ்சிப்பார்கள் தமிழக பாரம்பரியம் கலாச்சாரம் எப்படி பாடுபடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். என்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என நாமெல்லாம் ஒன்று பட வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காகவும் இந்த பிரச்சாரம் பயணம் மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.
முதல்வரின் நான்காண்டு சாதனைகள் பிரச்சார பயணங்கள் சாதனைகளில் அமைச்சர் பட்டியல் இட்டார் அதுபோல் விண்ணப்பிக்கக்கூடிய அத்தனை பேருக்கும் ரேசன் கார்டு வழங்கி வருகிறோம்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி போல் டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடனே உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார். பேட்டியின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூகநலத்துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் கூட்டாக அளித்த பேட்டியில் சொன்ன தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் போலீசாருக்கு அதிகட்சமான தண்டனை கிடைத்திட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
அடுத்த
சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் டெத் சம்பவத்தை வைத்து மிகப்பெரிய நாடகத்தை நடத்திய திமுக மடப்புரம் லாக்கப் டெத்க்கு மவுனம் சாதிப்பது ஏன்? தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026