தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் கல்வியில் முன்னேறிட விலையில்லா மிதிவண்டிகள் பெரும் ஆதரவாக இருக்கும் என்றும், அரசு கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிக்குமார், பள்ளி செயலாளர் ராம்குமார் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையாபுரம் பேரூராட்சி கழக செயலாளர் பாரதி கணேசன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R. முனியசாமி, வார்டு செயலாளர்கள் மாரிக்கண்ணன், பிச்சை, சின்னப்பர், பச்சிராஜன், அருள்சுந்தர், வார்டு உறுப்பினர் மணிகண்டன், பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அக்ஷய், ஒன்றிய கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் கசவன்குன்று பாலமுருகன், மகளிரணி மஞ்சமாதா, முருகலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி அர்ச்சனா, காவியா உன்னிடம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.