தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் வட்டாரத்திற்குட்பட்ட இராஜபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத்தின் மாபெரும் ஆசனப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.


விழாவை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையிலும், உதவி பங்குத்தந்தை மார்க்கோனி முன்னிலையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமுதாய நலனுக்கும் சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற ஆசனப் பெருவிழாவில் திரளான இறைமக்கள் பக்தியுடன் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.


பின்னர் அனைவருக்கும் அன்புவிருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மரிய ரீகன், ஊர் பொருளாளர் ரமேஷ், நிர்வாகிகள் திலக், ஜீனியஸ், ராகுல் சிங் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் அருட்சகோதரிகள், பல்வேறு சபை மற்றும் அன்பிய அமைப்புகள், ஊர் இறைமக்கள் இணைந்து விழா சிறப்பாக நடைபெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.


மிகுந்த ஆன்மிக எழுச்சியுடனும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்ற இப்பெருவிழா பங்கேற்ற அனைவரின் பாராட்டையும் பெற்றது.