திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (28.07.2026) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகங்கள் வழங்கி முறைப்படி வரவேற்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெறும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு ஆளுநருக்கு உரிய அரசு மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.