தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) நிறுவனத்தின் நிறுவனப் புதுமை மன்றம் (Institution's Innovation Council - IIC) மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் (Entrepreneurship Development Cell - EDC) ஆகியவை, யங் இந்தியன்ஸ் (Young Indians - Yi) அமைப்புடன் இணைந்து, "Think Like a Founder: Turning Ideas into Business" என்ற தலைப்பில் தொழில்முனைவு வழிகாட்டும் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கை இன்று நடத்தின.



கல்லூரி ஸ்டார் ஹாலில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஸ்டுடியோ சினியாஸ்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் வருண் அரவிந்த் மற்றும் யங் இந்தியன்ஸ் (Yi) தலைவர் பிரேம் பால் நாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் மாணவிகளுக்கு தொழில்முனைவு திறன்கள், புதுமை சிந்தனை, தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக தேவையான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சிபானா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முனைவர் எஸ். காயத்ரி, முனைவர் இ. டஃபோடில் டி'அல்மெய்டா மற்றும் முனைவர் பி. கீதா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர். மாணவிகளிடையே தொழில்முனைவு மனப்பான்மையையும் புதுமை சிந்தனையையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.