சென்னை மகாபலிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமின் நிறைவு நாளில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாவட்டத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தினார். நிறைவு நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ராகுல் காந்தி அன்புடன் சந்தித்து நினைவுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



பின்னர் மாவட்டத் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் நீடித்த சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்தி, கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் வழிமுறைகள், அமைப்பு வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.



இந்த பயிற்சி முகாம் மாவட்டத் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தையும், கட்சிப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுக்கும் வகையிலும் அமைந்ததாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்த தகவலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தெரிவித்துள்ளார்.