தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் சொரூப பவனி வருகிற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். அப்போது பேராலய பங்குத்தந்தை ஜான் செல்வத்திடம் ஆசி பெற்ற அவர், திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியை ஆரம்பித்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், சாத்தான்குளம் முன்னாள் யூனியன் கவுன்சிலர் சுதாகர், கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, தங்கதுரைபாண்டியன், புன்னக்காயல் முன்னாள் ஊராட்சி தலைவர் சோபியா, எடிசன், போக்குவரத்து கழக தொமுச நிர்வாகி முத்துராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், நெல்சன், சுதாகர், கனகராஜ், அனிட்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.