தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி. கீதா ஜீவன், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இன்று (18.04.2026) காலை 7 மணி அளவில் கிருஷ்ணராஜபுரம் வட்ட கோவில் முன்பில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், 5வது வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். மக்கள் மத்தியில் நேரடியாக சந்தித்து உரையாடிய அவர், கூட்டணியின் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற நோக்கங்களை விளக்கினார்.


அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி அளவில் 43வது வார்டு பக்கிள்புரம் பகுதியில் இருந்து மீண்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. 43, 46, 47 ஆகிய வார்டுகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இப்பணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


இந்த பிரச்சாரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்று வெற்றிக்கான உறுதியை வெளிப்படுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பணி குழு சார்பில், அனைவரும் இணைந்து தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.