தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா டீ கடையில் தொடங்கி, கே.டி.சி. நகர், எஸ்.எம்.டி. ஹவுசிங் போர்டு, கொத்தனார் காலனி உள்ளிட்ட 3வது வார்டு முழுவதும் கவுன்சிலரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொமுச முன்னாள் செயலாளர் எஸ்இடிசி முத்துராஜ், தொமுச முன்னாள் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில், செல்வராஜ், பாலு, டேவிட் ராஜ், சேவியர், ஜெகதீசன், கலை இலக்கிய அணி முருகேசன், ரத்தினவேல், கோபால், ராஜாமணி, சுப்புராஜ், வீரப்பன், ராஜேஷ், சங்கர் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
இளைஞர் அணியினர் உற்சாகமாக களமிறங்கி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, உதவித்தொகை உயர்வு, இன்னுயிர் காப்போம் 48 திட்டம், அன்புச்சோலை, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம், இலவச வீட்டு மனை பட்டா, உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம், தாயுமானவர் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மேம்பாடு, சொத்து பதிவில் மகளிர்க்கு முன்னுரிமை, விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, “நலம் காக்கும் ஸ்டாலின்” உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் விரிவாக விளக்கப்பட்டன.
இதன் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு வரும் 23.04.2026 அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மகளிரணி அமுதா, சுகுமாரி, இந்திரா உட்பட திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மேலும், திராவிட மாடல் 2.0 அரசிற்கான தேர்தல் வாக்குறுதிகளாக 8000 ரூபாய் மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் 2000 ஆக உயர்த்துதல், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்துதல், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூபாய் 1500 ஆக உயர்த்துதல், 35 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்குதல், “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் அரசு சேவைகளை வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வது, 5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குதல், விவசாயிகளுக்கு இலவச நவீன மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்குதல், 2030க்குள் குடிசையற்ற தமிழ்நாடு உருவாக்க 10 லட்சம் புதிய வீடுகள் கட்டுதல், முதியோர், விதவைகள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை, மருத்துவ காப்பீட்டை ரூபாய் 10 லட்சம் வரை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டன.
இவ்வாறு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி, 3வது வார்டு முழுவதும் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.