ஐ.டி. பார்க், சிப்காட், விமான நிலையம், கார் தொழிற்சாலை போன்றவை எல்லாம் அதிகரித்த பிறகு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் ரியல் எஸ்டேட் கிராஃப் ஏறு முகத்தில் நகர ஆரம்பித்தது. ரியல் எஸ்டேட்.... ரியல் 'நில' வரம் தமிழ்நாடு கைடு லைன்!
தூத்துக்குடி தெற்கே திருச்செந்தூர், மேற்கு திருநெல்வேலி, வடக்கே மதுரை, கிழக்கே துறைமுகம் என சூழப்பட்டு மையத்தில் பிரதான ஊராக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி, விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளன. இங்கு ஐடி நிறுவனங்கள் பெரிதும் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சூழல் இருந்தது. இதனால் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்களே இங்கு மனை வாங்கி வீடு கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால் ஐடி பார்க், சிப்காட், விமான நிலையம், கார் தொழிற்சாலை, போன்றவை எல்லாம் அதிகரித்த பிறகுதான் தூத்துக்குடி மாவட்டத்தின் ரியல் எஸ்டேட் கிராஃப் ஏழு முகத்தில் நகர ஆரம்பித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டத்தில் தலைநகரான தூத்துக்குடியில் எப்போதுமே மனை விலை ஏறு முகத்தில் இருந்திருக்கிறது. அதேபோல் கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளும் பிரதான ஏரியாக்கள் என்பதால் விலையேற்றம் தொடர்ந்து சீராக இருந்துள்ளது. ஆனால் 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் கொஞ்சம் டல் அடித்துள்ளது. 2016 க்கு பிறகு அடுத்தடுத்து வந்த அரசின் பல வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகள் புதிய தொழிற்சாலைகள், மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் போன்ற காரணங்களால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே மனை களின் விலை அதிகரித்துள்ளது. இங்கு தற்போது சதுர அடி 650 ரூபாயிலிருந்து 20,000 வரை விற்பனை ஆகிறது. விலையேற்றத்துக்கான காரணிகளை விளக்குகிறார் மாநில சுற்றுப்புற சூழல் கமிட்டியின் துணைத் தலைவரும், அகில இந்திய வீடு கட்டுவோர் சங்கத்தின் தூத்துக்குடி மைய முன்னால் தலைவருமான முஜாஹித் அலி,
தூத்துக்குடியில் ரயில் பேருந்து, விமானம் என 24 மணி நேரமும் போக்குவரத்து வசதிகள் இருப்பது பிளஸ் பாயிண்ட் கூடுதலாக நான்கு வழிச்சாலை மேம்பாலங்கள் போன்றவை இருப்பதால் பெரும்பாலும் டிராபிக் பிரச்சனை இல்லாமல் பயணிக்க முடிகிறது. விமான நிலையம் வந்த பிறகு வாகைகுளம், முடிவைத்தானந்தல் தெய்வச்செயல்புரம் பகுதிகளில் மக்கள் முதலீட்டுக்காக மனை வாங்க தொடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் ரிசார்ட்டுகள் போன்றவை வர தொடங்கியுள்ளதால் முதலீட்டார்கள் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்குகிறார்கள். அதனால் இந்த பகுதியில் மனையின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. தூத்துக்குடி ரயில் நிலையம் மீலவிட்டான் பகுதிக்கு மாற்றப்படும் என முன்னர் பேச்சுக்கள் இருந்தன அதனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பின் அங்கு மக்கள் மனை வாங்க தொடங்கினர். விளையும் மும்மடங்கு அதிகரித்தது. ஆனால் இப்போது தூத்துக்குடியிலேயே ரயில் நிலையம் தொடர்வதால் மீள விட்டான் பகுதியில் ஏற்ற இறக்கம் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இந்நிலையில் இங்கு டைட்டில் பார்க் வந்த பிறகு ஐடி நிறுவனங்கள் வரும் என்ற நம்பிக்கையில் பலரும் இங்கும் மனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் மீள விட்டான் பகுதியில் எதிர்காலத்தில் மனையின் விலை இருமடங்காக வாய்ப்புகள் அதிகம், முத்தம்மாள் காலனி முழுக்க முழுக்க வீட்டு மனைகள் சூழ்ந்த பகுதி இங்கு விலை நிலவரம் நடுத்தர குடும்பத்து மக்கள் வாங்கும் அளவில் இருப்பதால் இங்கு மனை வாங்கி வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறேன் அதிகரிக்கிறது. பால்பாண்டியன் நகரை பொறுத்தவரை பள்ளிகள், கல்லூரியில் அதிகம் இருப்பதால் மக்கள் தொடர்ந்து மனை வாங்கி வீடு கட்ட ஆர்வம் காட்டுகிறார்கள். கடற்கரைக்கு அருகில் இருப்பதால் மட்டக்கடை பகுதியிலும் தொடர்ந்து வினையெச்சம் இருக்கிறது. மறவன் மடம் பகுதியில் மருத்துவமனைகள் அதிகம் தற்போது இங்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.. மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தால் மனையின் விலை உச்சத்தை தொடும் என்ற எண்ணத்தில் பலரும் இந்த பகுதியில் முதலீடு செய்கிறார்கள்.
டபுள்யூ ஜி.சி ரோடு என்பது வணிக மையங்கள் சூழ்ந்த பகுதி பெரிய பிராண்டுகள் அனைத்தும் இங்கு இருப்பதால் தொடர்ந்து இந்தப் பகுதியில் மனைவியின் விலை இரட்டிப்பு வேகத்தில் இருக்கிறது. கணேச நகர், பிரையன்ட் நகர் ஆகியவை திட்டமிடப்பட்ட பகுதிகள் இன்றே சொல்லலாம். இவை 40, 60 அடி வீதிகள் 6 சென்ட், 8 சென்ட் வீடுகள் என விசாலமான பகுதி என்பதாலும் விஐபிகள் வசிக்கும் பகுதிகளில் என்பதாலும் தொடக்கம் முதலே விலையேற்றம் இங்கு சீரான வளர்ச்சியில் இருக்கிறது. கோவில்பட்டியில் கல்வி நிலையங்கள் அதிகம் மேலும் திருநெல்வேலிக்கு அருகில் இருப்பதால் அங்கே குடியேற விரும்பும் மக்கள் எண்ணிக்கை அதிகம். எனவே மாவட்ட தலைநகரான தூத்துக்குடியைவிட கோவில்பட்டியில் மனையின் விலை எப்போதும் ஹைப்பில் இருக்கிறது. உடன்குடியில் அணுமின் நிலையம் இருப்பதாலும் துறைமுகம் அருகில் இருப்பதாலும் இந்த பகுதிகள் மனையின் விலை ஏற்றத்தில் இருக்கிறது.
திருச்செந்தூர் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் ஒன்று திருச்செந்தூரை சுற்றி தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் அதிகம் தேவைப்படுவதால் அங்கு மனையின் விலை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது வீட்டுமனைகளின் விலை ஏற்றத்துக்கு முக்கியமான ஒரு காரணம் என்றாலும் பில்டர்கள் பலரும் ஏக்கர் கணக்கில் மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்பனை செய்து வருவதும் விலை ஏற்றத்துக்கு ஒரு காரணியாக உள்ளது என்று விளக்கினார்.
தூத்துக்குடி
சதுர அடி ரூ.650 முதல் 20,000 வரை..... துரித வளர்ச்சியில் தூத்துக்குடி...... வீட்டு மனை வாங்க தயாரா..?
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைக்க இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மணியாச்சியில் நடைபெற்ற முருகன் இல்ல திருமண விழாவில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026