தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு இல்லம் 1973 ஆம் ஆண்டு அன்றைய முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதி பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதை நினைவு இல்லமாக திறந்து வைத்தார்.

இந்த நிலையில் பாரதியார் இல்லம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முன்கூரை இடிந்து விழுந்து இந்நாள் வரை எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருக்கிறது. இது பெரும் மன வேதனையை அளிக்கிறது. ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சீரமைத்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.