அதிமுக பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் ஆலோசனையின் பேரில், அதிமுக வர்த்தக அணி சார்பில் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நேற்று மாலை உணவு பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில், பிஸ்கட் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் R.L. ராஜா, தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், வட்ட செயலாளர்கள் அருண்குமார், அந்தோனி ஸ்டாலின், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கோட்டாளமுத்து, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம்,
பாலசுப்பிரமணியன், அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணைச் செயலாளர் சங்கர், ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன் என்ற அய்யப்பன், துறைமுகம் ராஜ்குமார், ஜோதிகா மாரி, ராஜசேகர், வெங்கடாசலம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், மகளிர் அணி பொண்ணு தாய், பேச்சியம்மாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.