அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம். சினிவாசன் தலைமையில் 21 நாடார் அமைப்புகள் ஒன்று கூடி, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன.


சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று காலை சந்தித்த அவர்கள், நாடார் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


இந்த சந்திப்பில் இந்திய நேதாஜி இளைஞர் முன்னேற்றப் படை, மக்கள் பசுமை இயக்கம், புதிய மக்கள் தமிழ்தேசம், காமராஜர் நற்பணி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.


அமைப்புகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:


நாடார் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு


ஜாதி வரி கணக்கெடுப்பு நடத்துதல்
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மற்றும் கட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்குதல்


சென்னை விமான நிலையத்தில் காமராஜர் திருவுருவச் சிலை அமைத்தல்


தூத்துக்குடி விமான நிலையம்க்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்டுதல் மற்றும் சிலை நிறுவுதல்


தாமிரபரணி ஆற்றை சீரமைத்தல்


பனைமர தொழிலாளர்களுக்கு கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதி


உடன்குடி அனல் மின் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை


கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அமைப்புகள், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு முழுமையான ஆதரவை அறிவித்தன. நிகழ்வில் பல்வேறு நாடார் அமைப்புகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.