தூத்துக்குடியில் இன்று மாலை கீழ சண்முகமுபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அந்தோணி சேவியர், முன்னாள் தொகுதி கழக துணை செயலாளர் ஞாயம் ரொமால்டு, முன்னாள் நகர்மன்ற சேர்மன் மனோஜ்குமார், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக கழக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்றினார்

நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மின்சார பிரிவு நிர்வாகிகள், டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய வடக்கு பகுதி சிறுபான்மையினர் செயலாளர் அசன் நன்றியுரை நிகழ்த்தினார். கழக வர்த்தக அணி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.