தூத்துக்குடி ஏ.ஆர்.எஸ் தனியார் மண்டபத்தில் இன்று மாலை மதநல்லிணக்க இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சி தலைவர்கள், மாவட்ட வியாபாரிகள் சங்கத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், இஸ்லாமிய சமூக பெரியவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

இஸ்லாமிய முறைப்படி அனைத்துக்கட்சி தலைவர்கள், வியாபாரிகள் சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், என அனைவருக்கும் இனிப்பு மற்றும் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான மற்றும் பொது தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத், (தூத்துக்குடி மாவட்ட மத நல்லிணக்க கூட்டமைப்பு) நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.