அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் இதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுவது, போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமிய பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வரும் (26.3.20205) புதன்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், தமிழக முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப் பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, கிளைக் கழகம், மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாடு
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுக வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
அடுத்த
ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு ஸ்கூட்டர்!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025