தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.குமரெட்டியாபுரம் கிராமம் மற்றும் அ.வேலாயுதபுரம் கிராமத்தில் தலா ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பயன்படும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், கூட்டுறவு சார்பதிவாளர் முருகலட்சுமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர், புதுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமண பெருமாள், கிளை செயலாளர்கள் செல்வகுமார், சண்முகராஜ், பாலமுருகன், கிளை பிரதிநிதி சரவண பெருமாள், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகே வரும் திங்கட்கிழமை (02.02.2026) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ள “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக் கூட்டத்திற்கான இடத்தையும் G.V.மார்கண்டேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.