தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன், 45வது வார்டு பகுதிக்குட்பட்ட பிரையன்ட் நகர் 13வது தெருவில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திமுக வட்ட பிரதிநிதி சரவணன் இல்லத்திற்கு சென்ற கீதா ஜீவனை அவரது குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று, புகைப்படம் பொருந்திய நினைவுப் பரிசை வழங்கினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் உற்சாகமான சூழலை உருவாக்கியது.


நிகழ்வில் 45வது வார்டு திமுக வட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.