தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி (07.04.2025) திங்கள்கிழமை மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற இந்த தொழில்நெறி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜோஸ் சசிகுமார் தலைமை வகித்தார். 
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செய்யது முகமது கலந்து கொண்டு இந்திய விமானப் படை, டிப்ளமோ படிப்பிற்கு பின் வேலைவாய்ப்புக்கு உகந்த குறுகிய கால படிப்புகள், உயர்கல்வி படிப்புகள், ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் துறைச் சார்ந்த வேலைவாய்புகள், தனியார் துறையின் வேலை வாய்புகள், மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பாடத்திட்டங்கள், அரசாங்க வேலைகளை அறிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவை குறித்து துறைச்சார்ந்த விவரத்தை மாணவர் மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு பயற்சித் துறை இணை இயக்குநர் ஹரி பாஸ்கர் கூடுதலாக சீருடை பணியாளர் வாரியம் மற்றும் காவல்துறைச் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.