தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.



நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அழகு சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோஸ் சசிகுமார் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை திருநெல்வேலி உதவி கோட்ட பொறியாளர் ஜே. சசிகலா சாலையில் வாகனத்தை ஓட்டும் முறைகள், விதிமுறைகள், அதனால் ஏற்படும் விளைவுகள், சட்டதிட்டங்கள் ஆகியவை குறித்து வீடியோ மூலம் மாணவ மாணவியர்களுக்கு எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார்.


இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி உதவி பொறியாளர்கள் டி. செல்வம், எம். லட்சுமிபிரியா மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர் மாணவிகள் பங்கேற்றனர்.