தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு, நிறுவனத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
முகாம் மூலம் பல இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ள நிலையில், இத்தகைய முயற்சிகள் இளம் தலைமுறையின் வளர்ச்சிக்கும், மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் துணைபுரிகின்றன என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் : தேர்வானவர்களுக்கு கனிமொழி கருணாநிதி நியமன ஆணைகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கூட்டுடன்காடு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் புதிய பள்ளி கட்டடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் முன்னெடுத்த பெரிய முன்னேற்றம் — 50 ஆண்டு கனவான பாலம் பணி தொடக்கம்; வாக்காளர் சேவைகளும் கண்காணிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026