சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் "புதுமைப்பெண் – தமிழ் புதல்வன் 2025–26 கல்வியாண்டு" தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தின் கல்வி எழுச்சியை முன்னிறுத்தும் இந்நிகழ்ச்சி, ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் காணொளி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

அங்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லினார். கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் கல்வி மரபை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கிரேஷா ஜேக்கப், வட்டார வளர்ச்சி சசிக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு கல்வி விழாவின் சிறப்பை உயர்த்தினர்.

கல்வியில் முன்னேற்றம் காணும் தமிழ்நாட்டின் புதிய பயணத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.