தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டின் லயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை பொதுமக்கள் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் பெரும் வேதனை தெரிவித்தும், உத்தரவை ரத்து செய்ய மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், நிர்வாகிகள் சகாயராஜ், சிறுபான்மை பிரிவு அசன், வட்ட செயலாளர் லயன்ஸ் டவுன் சகாயராஜ், போக்குவரத்து கழக நிர்வாகி பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
“லயன்ஸ் டவுன் பட்டா ரத்து: மக்கள் கோபம் – முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நேரில் சமாதானம்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பிரதான சந்திப்புகளில் புதிய மின் விளக்குகள்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வு!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பில் கல்வி எழுச்சி விழா ஒட்டப்பிடாரத்தில் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026