பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக தூத்துக்குடி நகருக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கோரம் பள்ளம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சர்வீஸ் சாலையில் உள்ள சுவரில் மோதி கடுமையாக காயமடைந்தனர்.

இதை கண்டவுடன் துரை வைகோ அவர்கள் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தார்.

திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மனிதநேயத்தை முன்னிறுத்தும் துரை வைகோவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.