தூத்துக்குடி அபிராமி மஹாலில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு மற்றும் பாக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டமும், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு, கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், நடைபெறவுள்ள தென்மண்டல திமுக இளைஞரணி மாநாட்டிற்கு இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
இளைஞர்களின் பங்களிப்பே கழகத்தின் எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாகும் என அவர் வலியுறுத்தினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. ஆனந்தகுமார், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்த சேகரன், தூத்துக்குடி மாநகர மேயர் திரு. ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, இளைஞரணியின் செயல்பாடுகள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வருங்கால பணிகள் குறித்து உரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. மதியழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. ராதாகிருஷ்ணன், திரு. மகேந்திரன், திரு. ஜோசப் அமல்ராஜ், திரு. பாரதி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாவட்ட பொருளாளர் திரு. சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச் செயலாளர் திரு. கனகராஜ், பகுதி கழக செயலாளர்கள் திரு. ஜெயக்குமார், திரு. நிர்மல் ராஜ், திரு. சுரேஷ் குமார், திரு. ராமகிருஷ்ணன், திரு. மேகநாதன், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர், மாநகர துணை அமைப்பாளர்கள் திரு. செல்வின், திரு. ரவி, திரு. சங்கர நாராயணன், திரு. பிரவீன் குமார், திரு. முகமது ஜெய்லாப்தீன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் திரு. ராஜா பெரியசாமி, திரு. ராமச்சந்திரன், திரு. சூரியகாந்த், திரு. ராஜா முனியசாமி, திரு. நிர்மல் சரவணகுமார், திரு. செந்தூர் பாண்டி மற்றும் பகுதி, பாக இளைஞரணி துணை அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இக்கூட்டம், தூத்துக்குடி மாநகரில் திமுக இளைஞரணி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் நடைபெற்றது.