நேற்றைய முன்தினம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணையின்படி, தூத்துக்குடி எம்.பி, மற்றும் அமைச்சர் அறிவுத்தலின்படி, மேயர் மற்றும் மாநகர செயலாளர் வழிகாட்டுதலின்படி "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை 50 வது வார்டு பாகம் எண் 203 பகுதியில் 203 & 205 பொறுப்பாளரும், கவுன்சிலருமான சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
203 பாக முகவர் சங்கரநாராயணன், 203 BDA சிவக்குமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் ஐம்பதாவது வட்டக் கழக இளைஞரணி அமைப்பாளர் சுப்புராஜ் துணை அமைப்பாளர் அருண்குமார் மகளிர் அணி துணை அமைப்பாளர் பார்வதி ஆகியோர் வீடு வீடாக சென்று "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் புதிய திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.