தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்றார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கன்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ இளம்பதி வரவேற்புரை ஆற்றினார். திமுக வக்கீல் அணி மாநில இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டத்துறை துணைச் செயலாளர் ராஜா முகமது, திமுக தலைமைக் கழக வக்கீல் மனோஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றியபோது,
“2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மாற்றுக் கட்சியினரை பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மாதிரியான முயற்சிகள் தமிழகத்தில் நடைபெறாத வகையில், நமது திமுகவினர் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக வக்கீல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்று, திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கும் பெருமை நமக்குக் கிடைக்க வேண்டும். அதற்காக இப்போதே நாம் களப்பணிகளில் ஈடுபட வேண்டும்.
பீகாரில் நடந்தது போல் வாக்கு திருட்டு தமிழ்நாட்டில் நடைபெறாது என்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் நமது வக்கீல்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். எவ்வளவு நெருக்கடியையும் ஒன்றிய அரசு கொடுத்தாலும், பாஜகவின் கனவு தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது,” எனத் தெளிவுபடுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன், செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், சீனிவாசன், கவிதாதேவி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, துணை மேயர் ஜெனிட்டா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், சின்னமாரிமுத்து, ராதாகிருஷ்ணன், மூம்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதகிருஷ்ணன், இம்மானுவேல், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சோமபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், முருக இசக்கி, ரூபஸ் அமிர்தராஜ், செல்வலட்சுமி, ரூபராஜா, ரவி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் திமுகவினர் விழிப்புடன் ஈடுபட வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பாஜகவின் கனவு தமிழகத்தில் ஒருபோதும் நனவாகாது” – தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரம்!!
அடுத்த
எப்போதும் வென்றான் ஊரில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து பாஜக விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026