தமிழக அரசின் திட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்கப்படும் செயல்முறையின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆறுமுகம் அவர்கள் நேற்று (27.11.2025) பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் அவர் முதல் முறையாக பங்கேற்றார். கூட்டத்தின் போது ஆறுமுகம் அவர்கள் தமிழக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களும் ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 23-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி அவர்கள் ஆறுமுகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தூத்துக்குடி
சிபிஐ கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி: மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026