தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசம்) மருத்துவர் க. சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்படி காசநோய் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு காசநோய் முகாம் மாவட்டம் முழுதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாநகர காசநோய் அலகு 2 ன் சார்பில் கணேஷ்நகர் நல மையம் மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர். செல்வ வினோஜினி வழி காட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் தேசிய காசநோய் ஒழிப்புப் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் பொது மருத்துவம் மேற்கொள்ளப்பட்டன.


இந்த முகாமினை 50 வது வார்டு வார்டு கவுன்சிலர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட சுகாதாரக் கல்வியாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மதியழகன், ரேடியோகிராபர் எட்டய்யா, சுகாதார உதவியாளர் தேவி, WHV. சொர்ண செல்வி, UHN. நாராயண வடிவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பொதுமக்களுக்கு SMILE FOUNDATION NGO நடமாடும் மருத்துவ குழு சார்பில் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை காசநோய் அலகு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மதியழகன் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த முகாமில்  பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் 50 வது வார்டு வட்ட பிரதிநிதி ஜி.எம். செல்வம், வட்ட துணை செயலாளர் ஜெயம் மேரி, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.