தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேசிய மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி கொறடா, கவுன்சிலர் மந்திரமூர்த்தி
1. தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் அவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பாகவும், தூத்துக்குடி அதிமுக மாமன்ற உறுப்பினர் சார்பாகவும் ஆணையர் அவர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
2. தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி (டூ) திருநெல்வேலி செல்லும் பாளையங்கோட்டை ரோடு 3 மைல் மேம்பாலம் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் ஏற்கனவே பழுதடைந்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே எந்தவித விபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த மேம்பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு உடனடியாக புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
3. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாநகர முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு நிலங்களில் உள்ள உடை (கருவேல) மரங்களை அகற்ற வேண்டும்.
என்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர் மந்திரமூர்த்தி பேசினார்.