நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் தவறு நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறை மூலம் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பாஜக அரசு தோல்வியடைந்ததை கண்டித்தும், பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தியதன் பேரில், தூத்துக்குடியிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றி நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, “பதவி விலகு மோடி”, “அமித்ஷா பதவி விலகு”, “அமலாக்கத்துறையே கண்டிக்கின்றோம்”, “வெட்கக்கேடு வெட்கக்கேடு – இ.டி. வெட்கக்கேடு”, “பிரதமர் மோடி பதவி விலகு” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் செந்தூர் பாண்டி சேகர், ஐசன் சில்வா, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், எஸ்சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாச்சலம், முத்துராஜ், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன், சரஸ்வதி நாதன், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலாதேவி, வார்டு தலைவர்கள் மகேந்திரன், வாசி ராஜன், ஜோ பெர்னான்டோ, இருதயராஜ், ஜான்சன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சுடலை, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் விருப்பமனு!!
அடுத்த
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்மருத்துவ பயனாளிகள் பிரிவில் மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026