தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கி ஆன்மிக உற்சாகத்தில் நடைபெற்று வருகிறது.
பாரம்பரிய சிறப்புமிக்க இந்த சிவன் கோயிலில் நடைபெறும் சித்திரை பெருந்தேர் விழா, பக்தர்களின் திரளான பங்கேற்புடன் தினந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆறாம் திருவிழாவாக காலை முதல் இரவு வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்புற நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஆன்மீக வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து "பாட்டும் பரதமும்" என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மிக உணர்வுடன் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். சித்திரை பெருந்திருவிழா தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.