தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர்.


ஓட்டப்பிடாரம் தொகுதியில், தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள கே.எஸ். மரியப்பன் நினைவு செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி மற்றும் புனித தோமையர் திருத்தூதர் பள்ளி வாக்குச்சாவடிகளை வேட்பாளர் ராமஜெயம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அவருடன் 3 வது வார்டு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமியும் இணைந்து, வாக்குப்பதிவு நடைமுறைகள் சீராக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்தனர். வாக்காளர்கள் அமைதியாகவும் உற்சாகமாகவும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.