தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து நேற்று நண்பகல் பாஜக மகளிரணி மாநில தலைவர் உமா ரதிராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாஜக மாநில மகளிரணி தலைவி உமா ரதிராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டாலே மத்திய அரசின் திட்டங்கள் முழுவதும் தமிழகத்திற்கு வந்தடையும், யார் அந்த சார் இதற்கு பதில் தெரியும் வரை இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் பெண் சமுதாயத்திற்கு தொடரும்.
எவ்வளவு ஆர்ப்பாட்டம், எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக ஆர்வலர்கள், என அனைவரும் எத்தனை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை கொடுக்காதவரை இந்த பாலியல் குற்றங்கள் தொடரும்.
காரணம் என்னவென்றால் இந்த பகுதியில் (தூத்துக்குடி) இருக்கக்கூடிய எம்எல்ஏ, அதுமட்டுமல்லாது சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதா ஜீவன் 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யக்கூடிய ஒரு வார்டன் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது கொஞ்சம் யோசனை செய்யக்கூடிய விசயமாக இருக்கிறது. என்று கூறுகிறார்.
இது நன்றாக இருக்கிறதா, 15 ஆண்டுகள் வார்டனாக பணி செய்தால் என்ன 15 நிமிடங்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு சென்று விட்டாரே, இதற்கு இந்த அமைச்சர் என்ன காரணம் சொல்ல போகிறார்கள். ஒரு பெண் அமைச்சராக இருந்து கொண்டு 13 வது பெண் குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல், ஒரு பிஞ்சு பூ அந்த பெண்ணினுடைய கை கால்களை முறித்து காம கொடூரன் அந்த குழந்தையின் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறான்.
அதற்கான தீர்வு என்ன என்பதை தேடாமல் வார்டனுக்கு ஆதரவாக அமைச்சர் பேசியது ஏற்புடையது அல்ல, எத்தனை ஆண்டுகள் பணி செய்தால் என்ன, உடனே அவருக்கு ஆதரவாக பேசுவதா, ஒருவருடம் பணி செய்யக்கூடிய நபர் ஒருவர் குற்றம் செய்தால் அதற்கு இந்த அமைச்சர் என்ன சொல்ல போகிறார்கள். இப்படி சமூக நலத்துறை அமைச்சர் பேசலாமா, தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் இந்த அரசு இரும்பு கரம் கொண்டு அதே திமுக கட்சியை சேர்ந்த நபராக இருந்தாலும் கூட அவர்களையும் இரும்பு கரம் கொண்டு அடக்குவதே இந்த அரசாங்கத்தின் வேலையே தவிர செய்யும் தவறுக்கு நியாயங்களை கூறுவது அவர்களது வேலையாக இருக்கக்கூடாது.
பெண் அமைச்சராக இருந்து கொண்டு எப்படி தவறு செய்பவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் என்பது தெரியவில்லை, இந்த நேரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு பாஜக மகளிரணி மாநில தலைவியாக எனது கடுமையான கண்டனங்களை இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன். அப்போது யார் அந்த சார் தெரிந்தால் இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று கூற வருகிறீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆளும் கட்சியை சார்ந்த ஒரு நபர் தவறு செய்யும் போது அவருக்கு தண்டனை வழங்கினால் ஒரு பயம் வரும். யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு யாரோ ஒருவர் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். குற்றம் செய்தவர் வெளியில் இருக்கிறான். குற்றம் செய்தவருக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை இந்த குற்றங்கள் தொடரத்தான் செய்யும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
பேட்டியின் போது பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன், சரவணா கிருஷ்ணன், ஓ.பி.சி அணி மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு எனது கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக பாஜக மாநில மகளிரணி தலைவி உமா ரதிராஜன் பரபரப்பு பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய அரசு உள் கட்டமைப்புகளுக்கு வழங்கி பணத்தை தமிழக அரசு திருப்பி அனுப்பியது முதல் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தூத்துக்குடியில் பாஜக மாநில மகளிரணி உமா ரதிராஜன் பரபரப்பு பேட்டி!!
அடுத்த
முதுமையின் காரணமாக ஓய்வில் இருக்கும் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான செல்லுத்துரையை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026