வைப்பார் ஊராட்சி உட்பட்ட இனம் கல்லூரணி கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல் அருகே வங்காள விரிகுடா இனம் கல்லூரணி கிராமமாகும், இக்கிராமத்தில் ஏறக்குறைய 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடையாது, ஆகவே கீழே குறிப்பிடுகின்ற கிராம மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.
கோரிக்கை : 1
வைப்பார் ஆற்று பாலம் அருகில் புதிய வட்டக் கிணறு அமைக்கப்பட்டு மற்றும் அதனைச் சார்ந்து புதிய பைப் லைன் அமைத்தும், மேலும் தற்போது உள்ள நடைமுறையிலிருக்கின்ற HT டேங்க் 10,000 - லிட்டர் கொள்ளளவு 60,000 - லிட்டர் கொள்ளலவாக அதிகரித்து HT டேங்க் அமைப்பதோடு 30,000- லிட்டர் ஜம்பு ஒன்று அமைத்து கிராமமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
வைப்பார் ஆற்றிலுருந்து வரக் கூடிய தண்ணீரானது நேரடியான இனம் கல்லூரணி வந்தடைய வேண்டும். எங்கள் கிராமத்திற்கென்று அமைக்கப்பட்ட டேங்கை மற்ற யாரேனும் அதனை பயன்படுத்தக் கூடாது.
கோரிக்கை : 2
இனம் கல்லுரணி கிராமத்ததிற்கு வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரக்கூடிய பைப்பில் 1 நல்லி ( ஒன்று ) மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பிடிப்பதில் மக்கள் மிகுந்த சீரமப் படுவதோடு சண்டை சச்சரவு அளவுக்கு போய்விடுகிறது.
அதனை சரி செய்யும் வகையில் 5000 - லிட்டர் டேங்க் ஒன்றை அமைத்து மற்றும் நான்கு சிண்டெக்ஸ் பொருத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
கோரிக்கை : 3
நல்லிகள் இருப்பதோடு எளிதாக தண்ணீர் பிடிக்க மாண்புமிகு பிரதமர் மோடி திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தெருவிலும் வீட்டுக்கு ஒரு பைப்பு கிடைத்ததை பெருமைப்பட்டோம்.
ஆனால் ஒரு நாள் ஆவது தண்ணீர் வந்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, அதனை சரிசெய்து அன்றாடம் அந்த பைப்புகளில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
மேற்படி திட்டத்தின் கீழ் இனம் கல்லூரணியத் தவிர அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சரளமாக கிடைக்கப்படுகிறது என்பது அறிந்த செய்தி மட்டுமல்ல கண் கூட பார்த்துள்ளோம்.
கோரிக்கை : 4
இனம் கல்லுரணி கிராமத்திற்கு வடக்கு திசையில் உள்ள ஊரணியில் புதிய உறைக் கிணறு அமைத்துத் தரும்படி மிகவும் வேண்டிக் கொள்கிறோம்.
கோரிக்கை : 5
சாலை இனம் கல்லூரணி கிராமத்தில் அடுத்த தெருக்களிலும் பேபர் பிளாக் அமைக்கப்பட வேண்டும். மற்றும் மழைநீர் கழிவு நீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்பட வேண்டும்.
கோரிக்கை : 6
எங்கள் கிராமத்தில் உள்ள மயான சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
என்று கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி
கல்லூரணி கிராமத்திற்கு குடிநீர் வசதி, தெருக்களில் பேபர் பிளாக் வசதி, கழிவுநீர் கான் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் பெயர் சூட்ட வேண்டும் - சமக கோரிக்கை மனு!!
அடுத்த
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வேம்பார் பவுல் நகர் மக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026