தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் பெயர் சூட்ட வேண்டி சமக சார்பில் மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சமக மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-
தமிழகம் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் ஆன்மீகத்திலும் சிறந்தோங்க அரும்பாடு பட்டவர். அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் ஆயுள்கால தலைவராக இருந்து உலக அரங்கில் சிறந்த இந்திய விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்.
தென்தமிழகத்தில் கல்வி ஸ்தாபனங்கள் நிறுவி லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளை உருவாக்கியவர். தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய கோபுரம் கட்டிய இரண்டாம் பராக்கிரம பாண்டியர் என்று பெயர் பெற்றவர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு தனது சொந்த செலவில் வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலுவலகம் கொடுத்தவர். சென்னையில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய நேரு விளையாட்டு அரங்கம் அமைக்க அரும்பாடு பட்டவர்.
அதன் அருகில் 8 ஆயிரம் பேர் அமரக்கூடிய நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைத்தவர் அவருடைய சமூக சேவையினை பாராட்டி மத்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். ஐயா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
இந்திய வரலாற்றில் ஐயா அவர்களின் பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐயா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்பகுதியான தூத்துக்குடியில் அமைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஐயா பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும். என தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். என அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சமக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.