சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையான ஆதரவை வழங்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும், கட்சி பணியாளர்களும் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இந்த அழைப்பை முன்னிறுத்தி, மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.