தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் யார் வேட்பாளராக வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வியை, TUTY TALKIES என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டது.


இதற்கு பதிலளித்த பெரும்பாலான பொதுமக்கள், தவெக சார்பில் அஜிதா ஆக்னல் அவர்கள் வேட்பாளராக வந்தால் தொகுதிக்கு நல்லதாக இருக்கும் என ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். அஜிதா ஆக்னல் அவர்கள் மூலம் தான் தவெக கட்சி பொதுமக்களிடம் நேரடியாக சென்றடைந்ததாகவும், எளிதில் அணுகக்கூடியவராக இருந்து சமூக ரீதியாக பல உதவிகளை செய்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சி என்றாலோ, மக்கள் பிரச்சினை என்றாலோ தாமதமின்றி களத்தில் இறங்கி செயல்படும் தன்மை அவரை மற்றவர்களிலிருந்து தனித்துவமாக காட்டுகிறது எனவும் கூறினர்.


மேலும், அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய பழக்க வழக்கங்களும், எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய தன்மையும், மக்களுடன் நெருக்கமாக பழகும் பாங்கும் அஜிதா ஆக்னல் அவர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தூத்துக்குடி தொகுதிக்கு தவெக வேட்பாளராக அஜிதா ஆக்னல் அவர்கள் அறிவிக்கப்பட்டால், அது மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் முடிவாக இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.


இதேவேளையில், எது எப்படியிருந்தாலும் தவெக தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி தலைமையின் முடிவையே அனைவரும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். TUTY TALKIES நடத்திய இந்த கருத்துக் கேட்பு, தூத்துக்குடி அரசியல் களத்தில் அஜிதா ஆக்னல் என்ற பெயர் தற்போது பேசப்படும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.